நீண்டநாட்கள் உபயோகிக்காத ஜிமெயில் கணக்குகளை நீக்குவதாக கூகுள் அறிவிப்பு.!
இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு நீக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி அதில் சில கணக்குகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் பல கணக்குகள் செய்யப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு நீக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பில்:=
டிசம்பர் 1ம் தேதி முதல் செயலில் இல்லாத கூகுள் கணக்குகள் நீக்கப்படவுள்ளது. குறைந்தது இரண்டு வருடங்கள் உங்கள் கூகுள் கணக்கு செய்ல்படாமல் இருந்தால், அந்த கணக்கையும் அதன் செயல்பாடுகளையும் நீக்கும் உரிமை கூகுளுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் ஜிமெயில் அக்கவுண்ட் நீக்கத்தை தவிர்க்க, அவ்வப்போது உங்கள் ஜிமெயில் அக்கவுண்டை சைன்-இன் செய்ய வேண்டும்.
Tags: தொழில்நுட்பம்