Breaking News

ஞாயிற்றுகிழமை ரேசன் கடைகள் இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு.!

அட்மின் மீடியா
0

இந்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படஉள்ளது மேலும் எதிர் வரும் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லையென உணவுத்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் எனவும், பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதால், ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் கடைகளில் உள்ள இருப்பை சரிபார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 5 ஞாயிற்று கிழமை வேலை நாளை ஈடுகட்டும் பொருட்டு, அடுத்து ஏதேனும் ஒரு நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் எனவும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தமிழக உணவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

வழக்கமாக பல ரேசன் கடைகள் முதல் 2 வாரம் வெள்ளிக்கிழமை தான் விடுமுறை. ஞாயிறுக்கிழமை திறந்து இருக்கும். பகுதி நேர கடைகள் மற்றும் சில கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அந்த கடைகளை திறந்து வைக்க உணவுத்துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback