Breaking News

சைனிக் பள்ளியில் 6 முதல் 9 ம் வரை சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கப்பட்டது. இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே. வி. கிருஷ்ண மேனன்னால் 1961 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய இராணுவத்தில் சேரத் தயார்படுத்துவை முக்கிய நோக்கமாகக் இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 33 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளி உட்பட இந்தியா முழுவதும் 33 இடங்களில் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன

சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வாக நடத்தப்பெறும், அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத்தேர்வு - 2022 (All India Sainik Schools Entrance Examination – AISSEE 2022) இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் தேசியத் தேர்வு முகமையால் (National Testing Agency) நடத்தப்படுகிறது.



நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. 

விண்ணப்பிக்க:- CLICK HERE

https://aissee.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாகடிச.16-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.

கட்டண விவரம்: இதற்கு விண்ணப்ப கட்டண மாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.650-ம் இணையவழியில் செலுத்த வேண்டும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback