Breaking News

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை! சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை!

தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.6



இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback