சி.பி.எஸ்.இ பாட புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத்..! என்.சி.இ.ஆர்.டி குழு பரிந்துரை
சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் இனி பாரத் என மாற்ற என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை மாற்றி அமைப்பது குறித்து என்.சி.இ.ஆர்.டி. குழு ஆய்வு செய்தது. ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்தியாவுக்கு பதில் பாரத் என பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பண்டைய வரலாறு என்பதற்கு பதில் செவ்வியல் வரலாறு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும் என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே ஜி20 மாநாடு அழைப்பிதழில் இந்தியாவுக்குப் பதில் பாரத் என பயன்படுத்தப்பட்டது சர்ச்சையானது. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைத்ததற்கும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்