பெட்ரோல் குண்டு வீச்சு ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டுகள் - வீடியோ ஆதாரத்துடன் தமிழ்நாடு காவல்துறை மறுப்பு
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டவிவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ரவுடியை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்
ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட புகார், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த தாக்குதலை சாதாரணமான நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. இந்த வழக்கில், அவசரகதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நள்ளிரவில் மாஜிஸ்திரேட்டை எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த விசாரணை கொலை செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது
மேலும் ஆளுநர் மாளிகை தரப்பில் கும்பலாக வந்து ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாகவும், ஆளுநர் மாளிகை நுழைவாயில் எரித்து சேதப்படுத்தப்பட்டது எனவும்
ராஜ்பவன் ஊழியர்கள் தான் வினோத்தை பிடித்ததாவும் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு குற்றவாளி தப்பி ஓடிவிட்ட்டார்கள் என குற்றசாட்டு வைக்கபபட்டது
இந்நிலையில் ஆளுநர் மாளிகை கூறுவது போல் ராஜ்பவன் ஊழியர்களால் ரவுடி கருக்கா வினோத் பிடிக்கப்படவில்லை. கும்பலாக வந்து ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாக கூறியது ,ஆளுநர் மாளிகை நுழைவாயில் எரித்து சேதப்படுத்தப்பட்டது , ராஜ்பவன் ஊழியர்கள் கருக்கா வினோத்தை பிடித்ததாக கூறியது என அனைத்தும் பொய்யானது எனவும்
பாதுகாப்பில் உள்ள போலீசாரே ரவுடி கருக்கா வினோத்தை மடக்கிப் பிடித்தனர். ஆளுநர் மாளிகை வெளியிட்ட புகார், முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அறிக்கைகளாக வெளிவந்த ‘பொய்’ குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரத்துடன் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வீடியோ வெளியிட்டு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.
வீடியோ இணைப்பு:-
Tags: தமிழக செய்திகள்