Breaking News

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் - தமிழக அரசு

அட்மின் மீடியா
0

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறித்துள்ளது

காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும்

வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும்

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. 

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டின் காலாண்டு அரையாண்டுகளில் உரிமைத்தொகை பெறுபவர்களின் வருமானச் சான்று தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருமானம் உயர்ந்திருந்தால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு சார்பில் ஒரு கோடிக்கும மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை  நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவோரின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். 

ஜி.எஸ்.டி., சொத்து வரி, தொழில்வரிகள் உள்ளிட்ட தரவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி உறுதி செய்யப்படும். 

தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:-

https://kmutappeal.tnega.org/index.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback