Breaking News

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

அட்மின் மீடியா
0

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த தொகையை பெற 60 சதவீத மதிப்பெண்போதும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.



2023- 24-ஆம் நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபினா், பழங்குடியினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த 30 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலும், 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சம் ரூ. 1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது 

அதன்படி தமிழகத்தில் 9 முதல் 11-ஆம் வகுப்பு பயின்று வரும் 3,093 மாணவா்களுக்கு இந்த கல்வித் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், திட்டத்தின் கீழ் பயன்பெறுவோா் தேசியத் தேர்வு முகாமையால் நடத்தப்படும் நுழைவு தோவில் பெறும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவாா்கள்.

நிகழாண்டில் இந்த எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், போதிய காலஅவகாசம் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. 

இதனால், 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோவில் 60 சதவீதம் அதற்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவா்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

மேலும் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் தொடர்பு கொண்டு கல்வி உதவித்தொகை பயன்களை பெறலாம். 

மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகலாம்.

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback