Breaking News

இந்தியர்கள் தாய்லாந்து வர விசா தேவையில்லை! தாய்லாந்து அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை!

தாய்லாந்து வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை, அடுத்த மாதம் முதல் மே 2024 வரை நீக்குவதாக, தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.



இதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்கிக்கலாம். சமீபத்தில் இலங்கை நாடும் இந்தியர்கள் வருவதற்கு விசா தேவையில்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா வருமானத்தை அதிகரிக்க இந்தியாவிலிருந்து சுற்றுலா வரும் பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

மேலும், சுற்றுலா வரும் இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாள்கள் தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய நடைமுறை நவம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு மே வரை அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் தைவான் நாட்டினருக்கும் விசாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனர்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதித்து தாய்லாந்து அரசு உத்தரவிட்டிருந்தது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback