ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 8 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2053 பேர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2053 பேர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு
ஆப்கானிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது ஈரானின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி காலை 11:00 மணியளவில் ரிக்டரில் 6.3ஆக முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து எட்டு நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து,
அடுத்தடுத்து ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 முறையே நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து சேதமாகின.
அங்கே சமீப காலங்களில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது இருக்கிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்த 1,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் எனப் பலரும் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்குச் சிகிச்சை தரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
நிலநடுக்கத்திற்குப் பின் ஏற்பட்ட நில அதிர்வுகள் பல மணி நேரத்திற்குத் தொடர்ந்ததால், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் சாலையிலேயே தங்க வேண்டி இருந்தது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/WFP_Afghanistan/status/1710865706273956029
https://twitter.com/dhlmndatlan/status/1711002830268416030
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ