Breaking News

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம்

அட்மின் மீடியா
0
5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.




ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் ஆலோசனைகளின் படி இன்று ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுகிறது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

அத்துடன் மற்ற மாநிலங்களிலும் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் இதனை முன்னிட்டு 5 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே தேர்தல் நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 என 2 கட்டமாகவும், தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்படுகிறது.

5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு 

சத்தீஸ்கர் மாநிலத்தில்:-

முதல் கட்ட தேர்தல் : நவம்பர் 07 ம் தேதி  20 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும்

இரண்டாம் கட்டம் : நவம்பர் 17 ம் தேதி  70  தொகுதிகளில் தேர்தல் நடைபெறும்


மிசோரம் மாநிலத்தில் 

நவம்பர் 07 ம் தேதி  40 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும்

மத்திய பிரதேச மாநிலத்தில் 

நவம்பர் 17 ம் தேதி 230 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும்

ராஜஸ்தான் மாநிலத்தில்  

நவம்பர் 23 ம் தேதி 200 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும்

தெலுங்கானா மாநிலத்தில் 

நவம்பர் 30 ம தேதி 119 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும்

5 மாநில தேர்தல் முடிவுகள் : டிசம்பர் 03 ம் தேதி வெளியாகும்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback