நாகப்பட்டினத்தில் இருந்து 3 மணிநேரத்தில் இலங்கைக்கு கப்பலில் போகலாம் கட்டணம் எவ்வளவு முழு விவரம்
நாகப்பட்டினத்தில் இருந்து 3 மணிநேரத்தில் இலங்கைக்கு கப்பலில் போகலாம் முழு விவரம்
தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகின்ற 10-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த சொகுசு கப்பல் மணிக்கு 36 கிலோ மீட்டா் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது.
கப்பலில் பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குளுகுளு ஏசிவசதி
பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி பெட்டிகள்
ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள்
ஆபத்துகாலங்களில் உயிர் காக்கும் மிதவை படகுகள்,
மருத்துவ உபகரணங்கள்,
தீயணைப்பு கருவிகள்
நாகை - இலங்கை இடையே பயணிக்க 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 6500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்ட செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்