ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன் ரயில் மோதி பலி..!! வைரல் வீடியோ
ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன் ரயில் மோதி பலி..!! வைரல் வீடியோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உத்தரபிரதேச மாநிலம் ஜஹாங்கிராபாத்தில் உள்ள தேரா தௌலத்பூரில் வசிக்கும் முன்னா என்பவரது மகன் 14 வயதான் பர்மான்.
இவர் தனது இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட தனது நண்பர்கள் ஷுஐப், நாதிர் மற்றும் சமீர் ஆகியோருடன் தாமேதர்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுக்கச் சென்றுள்ளார்கள்
அப்போது பர்மான் ரயில் தண்டவாளத்தை நெருங்கியபோது, வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இந்த மோதலில் அங்கிருந்து தூக்கி வீசப்பட்ட பர்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ தகவல் அறிவிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பர்மானின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ