Breaking News

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ 1000 விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி Kalaignar Magalir Urimai Status Check Online

அட்மின் மீடியா
0

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ 1000 விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ள புதிய இணையதளம் முழு விவரம்

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ 1000 விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி



குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் பெற 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 1.06 கோடி பேர் தேர்வாகினர். அதேநேரம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களில் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். எதற்காக தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதே பலருக்கும் தெரியவில்லை. 

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து இதுவரை 1000 பெறாதவர்கள் தங்கள் விண்ணப்ப நிலை என்ன என்று பொது மக்கள் தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

அதன்படி https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை வைத்து என்ன காரணதிற்காக பணம் வரவில்லை என பொதுமக்களே தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் பயனாளிகள் தங்கள் நிலையை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்க்கில் உங்கள் ஸ்மார்ட் கார்டு எண் பதிவிட்டு சமர்பிக்க என்பதை கிளிக் செய்யுங்கள் உங்கள் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம்

விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள

https://kmutappeal.tnega.org/status_check/index.html?data=NmRCcHJUNm5aT0NUV24vQWMzdWNGOVVrSGRIR3U4a1I4aiswMFFhbXM5ND0=&iv=ODA5MTk1MzQ0MDIyODczOQ==#

கீழ் உள்ள புதிய இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை வைத்து என்ன காரணதிற்காக பணம் வரவில்லை என பொதுமக்களே தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது 

https://kmutappeal.tnega.org/login.html

குடும்ப தலைவி வரையறை:-

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.

ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத்தலைவியாக கருதப்படுவார். 

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவார்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லாதவர்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.

ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.

ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.

சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.

ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.

ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.

மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback