Breaking News

வாட்ஸப் சேனல் துவங்குவது எப்படி , டிலைட் செய்வது எப்படி, முழு விவரம் how to create Whatsapp Channel

அட்மின் மீடியா
0

வாட்ஸ்அப் புதிய அப்டேட் சேனல்ஸ் என்ற புதிய அம்சம் அறிமுகம்!  பேஸ்புக், இன்ஸ்டா டிவிட்டர் போல் இனி வாட்ஸப்பிலும் பாலோ செய்யலாம் முழு விவரம் Whatsapp Channel 

அதேபோல் நாம் வாட்ஸப் சேனலில் புதியதாக சேனல் உருவாக்கலாம் 


வாட்ஸ்அப் செயலியில் 'சேனல்ஸ்' என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன்மூலம் தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்தை பின்தொடர்ந்து அவர்கள் பகிரும் தகவல்கள், செய்திகளை தெரிந்துகொள்ளலாம்; இதில் அவர்களின் தொலைபேசி எண், புகைப்படம் உள்ளிட்ட சுயவிவரங்கள் எதுவும் பின்தொடர்பவர்களுக்கு காட்டாது

அதாவது பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் போல் இனி வாட்ஸப்பில் நாம் அவர்களை பாலே செய்யலாம்

தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள இந்த புதிய வசதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சேனல் ஹிஸ்டரியை 30 நாட்கள் வரை சேமித்து வைத்துகொள்ளலாம்.

மேலும் அதில் சர்ச் ஆப்ஷனும் உள்ளது அதில் நாம் பின்தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை பின் தொடரலாம், மேலும் இணைய முகவரிகள் மூலமாகவும் பயனர்கள் செய்திகளை அறியலாம்.

பாலோ செய்வது எப்படி 

முதலில் ப்ளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸப்பை அப்டேட் செய்யுங்கள்

அடுத்து உங்கள் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் பகுதியில் புதியதாக வந்துள்ள அப்டேட் என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள் 

அடுத்து அதில் சர்ச் செய்து உங்களுக்கு தேவையான பிடித்த சேனல்களை பாலோ செய்யுங்கள் 

வாட்ஸப் சேனல் கிரியேட் செய்வது எப்படி:-

வாட்ஸ்ஆப் சென்று அதில் அப்டேட்ஸ் என்ற பகுதிக்கு செல்லுங்கள்

அடுத்து அதில் பிளஸ் ஐக்கானை கிளிக் செய்து அதில் “Create Channel” என்பதை தேர்வு செய்யுங்கள்

அதன்பின்பு திரையில் காட்டப்படும் புதிய பயனருக்கான வழிகாட்டுதல்கள் தோன்றும் அதில் Continue கொடுக்கவும்

அடுத்து அதில் Create Channel பட்டனை கிளிக் செய்து சேனலை தொடங்க வேண்டும்.

சேனல் உருவாக்கியவுடன் Channel Link பகுதியில் கிளிக் செய்து லிங்கை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

வாட்ஸப் சேனல் டெலிட்செய்வது எப்படி:-

வாட்ஸப் சேனல் கிளிக் செய்து அதன் பின்பு info என்பதை செல்க்ட் செய்யவும்

அடுத்து Delete Channel என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

அதன்பின்பு வாட்ஸப் சேனல் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து உங்கள் போனுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து உறுதி படுத்த வேண்டும். 

அதன் பின்பு சேனலை டெலீட் செய்தால் சேனல் அழிந்துவிடும்.

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback