கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை என பரவும் வீடியோ? உண்மை என்ன? canada ban the rss fake or real
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் RSS ஐ முற்றுலிமாக தடை முதல் நாடு கனடா 😔1. இந்தியாவுக்கான கனடா தூதரை உடனடியாக திரும்ப அழைத்துபடுகிறது.2 - கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மாவை வெளியேற்றுதல்.3 - இந்தியாவுடனான உடனடி வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு முறையான முடக்கம்.4 - RSS ஐ முழுமையாகத் தடை செய்தல் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
இவர் காலிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதம் ஏந்திய போராளி குழுவாக செயல்பட்டு வந்தார். மேலும் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்
இவர் கனடா நாட்டில் தஞ்சமடைந்து குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார் கனடாவில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூன் 18-ம் தேதி இவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கனடா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதற்றம்:-
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இந்திய அரசின் ஏஜெண்ட்களுக்கு தொடர்பிருப்பதாக கனடா அரசு புகார் கூறியது ஆனால் இந்திய அரசு தங்களுக்கு தொடர்பு இல்லை என மறுப்பு தெரிவித்தது
மேலும் இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற கனடா நாட்டிற்கான வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் உள்ள கனடா நாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரி ஐந்து நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கான அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியாவில் வாழும் கனடா நாட்டு மக்கள் கவனமாக இருக்க அந்நாட்டு மக்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில் மத்திய அரசு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவிற்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள அதிகாரிகளிடம் இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறோம். அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் ஒட்டாவா நகரில் உள்ள இந்திய தூதரகம் அல்லது டொரான்டோ, வான்கோவர் நகரில் உள்ள துணைத் தூதரகத்தில்...தூதரகத்தில் பதிவுதங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை eன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Tags: FACT CHECK மறுப்பு செய்தி