அதிமுக மாவட்ட செயலாளர் மாற்றம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு! முழு விவரம் தெரிந்து கொள்ள
அதிமுக மாவட்ட செயலாளர் மாற்றம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு! முழு விவரம்
ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருந்த மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு
கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்திய மாவட்டங்கள் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. J. சீனிவாசன் அவர்களும்,
பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், Ex. M.L.A., அவர்களும்,
தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம், காவிரி பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.ராம. ராமநாதன், Ex. M.L.A., அவர்களும், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்களாகவும்; தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்தியம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகரக் கழகச் செயலாளர்களாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் மாவட்டச் செயலாளர் திரு.J. சீனிவாசன் அவர்கள் (திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ) மாவட்டச் செயலாளர்
பெரம்பலூர் மாவட்டக் கழகம் திரு. இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், M.A., (பெரம்பலூர் தொகுதி) Ex. M.L.A., அவர்கள்
தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் தம்பகோணம் மாநகரக் கழகம் திரு. ராம. ராமநாதன், M.Com., LLB., மாநகரச் செயலாளர் Ex. M.L.A., அவர்கள்
தஞ்சாவூர் மத்திய மாவட்டம் தஞ்சாவூர் மாநகரக் கழகம் திரு. S. சரவணன் அவர்கள் (மருத்துவக் கல்லூரி பகுதிக் கழக முன்னாள் செயலாளர்) மாநகரச் செயலாளர்
கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.
கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பிலும், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. I.S. இன்பதுரை, Ex. M.L.A., அவர்களும்,
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S. அப்துல் ரஹீம் அவர்களும்,
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் செல்வி விந்தியா அவர்களும்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ராயபுரம் மனோ அவர்களும்,
கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. R. காந்தி அவர்களும்,
வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. E. பாலமுருகன் அவர்களும்,
வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. V. ராமு அவர்களும்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், மதுக்கூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. துரை. செந்தில் அவர்களும்,
இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகச் செயலாளர்களாகவும்; சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்புச் செயலாளர்கள்
திரு. G. பாஸ்கரன் அவர்கள் (முன்னாள் அமைச்சர், சிவகங்கை மாவட்டம் )
திரு. அ. அன்வர்ராஜா, Ex. M.P., அவர்கள் (முன்னாள் அமைச்சர், ராமநாதபுரம் மாவட்டம்)
திரு. R. மனோகரன் அவர்கள் ( அரசு தலைமை முன்னாள் கொறடா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்)
திரு. V. ராமு, B.E., அவர்கள் (மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், வேலூர் புறநகர் )
திரு. ராயபுரம் மனோ, Ex. M.C., அவர்கள் (வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் )
திரு. துரை. செந்தில் அவர்கள் (மதுக்கூர் கிழக்கு ஒன்றியம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்) திரு. R. காந்தி அவர்கள் ( தஞ்சாவூர், தஞ்சாவூர் மத்திய மாவட்டம்)
கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. I.S. இன்பதுரை, B.A., B.L., Ex. M.L.A., அவர்கள் (திருநெல்வேலி புறநகர் மாவட்டம்)
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் திரு. S. அப்துல்ரகீம் அவர்கள் (முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் தெற்கு மாவட்டம்)
கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் செல்வி விந்தியா அவர்கள் (தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. S. அய்யாத்துரைபாண்டியன் அவர்கள் (சங்கரன்கோவில் தொகுதி, தென்காசி வடக்கு மாவட்டம்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் திரு. கி. மாணிக்கம், B.E., Ex. M.L.A., அவர்கள் (சோழவந்தான் தொகுதி, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் )
அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர் திரு. A.T.C. தனபால் அவர்கள் ( அயோத்தியாப்பட்டினம், சேலம் புறநகர் மாவட்டம் )
கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் - - - திரு. E. பாலமுருகன், M.A., B.L., அவர்கள் (வட சென்னை வடக்கு (கிழக்கு மாவட்டம்)
கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் திரு. N. மாரப்பன் அவர்கள் ( தமிழ் நாடு புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவர், கரூர் மாவட்டம் )
டாக்டர் P. சரவணன், Ex. M.L.A., அவர்கள் (திருப்பரங்குன்றம் தொகுதி, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்)
கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிப்பு ராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. சு. ரவி, M.L.A., அவர்களும்,
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. தூசி K. மோகன், Ex. M.L.A., அவர்களும்,
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, M.L.A., அவர்களும்,
திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. தச்சை N. கணேசராஜா அவர்களும்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S. ராமச்சந்திரன் அவர்களும்,
கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், கழக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திருமதி L. ஜெயசுதா, Ex. M.L.A., அவர்களும்,
இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் திரு. K.K. சிவசாமி, Ex. M.L.A., அவர்களும், (அருப்புக்கோட்டை தொகுதி, விருதுநகர் கிழக்கு மாவட்டம் )
திரு. S.G. சுப்பிரமணியன், Ex. M.L.A., அவர்களும், (சாத்தூர் தொகுதி, விருதுநகர் கிழக்கு மாவட்டம் ) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்
திருச்சி மாநகர் மாவட்டம் - புரட்சித் தலைவி பேரவை திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. C. கார்த்திகேயன் அவர்கள் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் பொறுப்பில் திரு. C. கார்த்திகேயன், B.E., Ex. M.C., அவர்கள் (ஆவின் முன்னாள் தலைவர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரி மாநிலம் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் புதுச்சேரி கிழக்கு, புதுச்சேரி மேற்கு ஆகிய மாநிலக் கழகங்கள், கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு இன்று முதல் 'புதுச்சேரி மாநிலம்' என ஒருங்கிணைக்கப்பட்டு, மாநிலக் கழக நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
புதுச்சேரி மாநிலக் கழக நிர்வாகிகள் திரு. G. அன்பானந்தம் அவர்கள் ( முதல் தெரு, வள்ளலார் நகர், லாஸ்பேட்டை அஞ்சல் )
மாநிலச் செயலாளர் திரு. A. அன்பழகன், Ex. M.L.A., அவர்கள் (பாரதி வீதி, புதுச்சேரி)
மாநில இணைச் செயலாளர்கள் பேராசிரியர் Dr. மு. ராமதாஸ், M.A., Ph.D., Ex. M.P., அவர்கள் (லட்சுமி இல்லம், VVP நகர், தட்டாஞ்சாவடி)
திருமதி S. வீரம்மாள் அவர்கள் (எல்லையம்மன் கோயில் தோட்டம், வாணரப்பேட்டை ) திருமதி M. மகாதேவி, M.A., Ex. M.C., அவர்கள் பிள்ளையார் கோவில் வீதி, கொடாத்தூர், மணவெளி
மாநில துணைச் செயலாளர்கள் திருமதி உமா (எ) கோவிந்தம்மாள் அவர்கள் (குமரன் வீதி, காமராஜர் நகர், புதுச்சேரி )
திரு. வையாபுரி மணிகண்டன், BBA., Ex. M.L.A., அவர்கள் (லோகமுத்து மாரியம்மன் வீதி, முத்தைய முதலியார் பேட்டை, முத்தியால்பேட்டை )
திரு. T. குணசேகரன், M.A., B.L., அவர்கள் மாரியம்மன் கோவில் வீதி, மாநிலப் பொருளாளர் முத்திரையர்பாளையம்)
திரு. P. ரவி பாண்டுரங்கன், B.A., அவர்கள் ( கந்தப்ப முதலி தெரு, புதுச்சேரி)
புதுச்சேரி மாநிலக் கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன். கழக அமைப்பு ரீதியாக தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநிலத்திற்கான சார்பு அமைப்புகளின் திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்