Breaking News

கடவுளே கேட்காத நிலையில் விநாயகர் ஊர்வலத்தால் மக்களுக்கு என்ன பயன்? - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி

அட்மின் மீடியா
0

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 



ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்துக்குட்பட்ட 13 இடங்கள் மற்றும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலங்களுக்கும் அனுமதி கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கபட்டதை தொடர்ந்து 

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலத்திற்கும் அனுமதி கோரியும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது.அப்போது அவர் கூறுகையில், 

சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி எந்த சாமிகளும் கேட்காத நிலையில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதால் என்ன பயன்? இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்னப் பயன்? விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலமாக சென்று அரசியல் செய்யப்படுகிறது. இந்த வழக்கில் நான் பதிவு செய்த கருத்துகள் எனது சொந்த கருத்துகள் என்பதை மட்டும் பதிவு செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் ஏற்கப்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback