நீண்ட நேரம் காத்திருந்ததால் ஆத்திரம் ஆப்பிள் ஸ்டோர் விற்பனையாளரை அடித்த வாடிக்கையாளர்கள் வைரல் வீடியோ
இந்தியாவில் ஐபோன் 15 விற்பனை தொடங்கியது இந்த மொபைல் போன் வாங்க கடைகளில் வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர்.
பல இடங்கில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் மொபைல் போனை வாங்கினர்
iPhone 15 இன் அசல் விலை ₹79,900 இல் இருந்து ₹74,900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.-
iPhone 15 Plus ஆனது ₹89,900 இலிருந்து குறைக்கப்பட்டு ₹84,900க்கு கிடைக்கிறது.-
iPhone 15 Pro விலை ₹1,34,900 இலிருந்து ₹128,900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.-
iPhone 15 Pro Maxஐ ₹153,900க்கு வாங்கலாம், இதன் அசல் விலை ₹159,900.
புதிய ஐபோனை வாங்க பல வாடிக்கையாளர்கள் மும்பை விரைந்தனர்.சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு.
இந்த நிலையில், ஐபோன் 15 வினியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
டெல்லியில் உள்ள கம்லா நகர் சந்தையில் உள்ள ஐபோன் விற்பனை மையத்தில் புதிய ஐபோன் 15-ஐ வாங்க காத்திருந்தனர். ஐபோன் 15 கிடைக்க அவர்கள் எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் ஆகும் போது, இரு வாடிக்கையாளர்கள் கோபமுற்றனர். இது தொடர்பாக விற்பனையாளர்களிடம் கேட்டபோது சரியான பதில் இல்லாததால் வாக்கு வாதம் முற்றி கைகலப்பானது
இந்த சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது
வீடியோ
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்