வதந்தி பரப்பாதீர்கள் | பள்ளியில் ஹிஜாப் அணிந்த மாணவியை தாக்கும் மற்ற மாணவர்கள் என பரவும் வீடியோ - நடந்தது என்ன
அட்மின் மீடியா
0
பள்ளியில் ஹிஜாப் அணிந்த மாணவியை தாக்கும் மற்ற மாணவர்கள் என பரவும் வீடியோ நடந்தது என்ன
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஹிஜாப் அணித்ததற்காக வகுப்பறையிலே சிறுமி சக மாணவர்களால் தாக்க படும் வீடியோ வெளியாகியுள்ளது . மாணவர்களிடையே விதைக்க பட்ட விஷம் இன்று நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ இந்தோனேசியாவில் 2020ம் ஆண்டு நடந்தது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் ஒரு பெண் வகுப்பறைக்குள் மேசையில் அமர்ந்துள்ளார் அந்த பெண்ணை மூன்று மாணவர்கள் கையால் அடிக்கின்றார்கள், உதைக்கின்றார்கள், குத்துகின்றார்கள்,காலால் எட்டி உதைக்கின்றார்கள்
அந்த வீடியோ இந்தியாவில் நடந்தை போல் ஷேர் செய்கின்றார்கள் ஆனால்
அந்த வீடியோ கடந்த 2020 ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள மத்திய ஜாவா தீவில் உள்ள பூர்வோரேஜோவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்துள்ளது
மேலும் அந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களும் கைது செய்துள்ளார்கள் என செய்தி வெளியாகி உள்ளது
முடிவு:-
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி