வட மாநிலங்களில் விற்க்கப்படும் மாட்டு சாணி ஜுஸ் என பரவும் வீடியோ உண்மை என்ன? முழு விவரம்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மாட்டு சாணி ஜுஸ் 50 ரூபாய் வட தேஸ மாநிலங்கள் மானுட சமூகத்தை விட்டு விலகி மிருகங்களை விட இழிவாகப் போய்க் கொண்டிருக்கின்றன! நமது தேசத்தின் நிலைமையை அறிந்து சிரிப்பதா பரிதாபப்படுவதா? என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் ஒருவர் பச்சை நிறத்தில் உருட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளை நீரில் கரைத்து அதை பானமாக மாற்றி விற்பனை செய்கிறார். அவற்றை பலரும் வாங்கிப் பருகினர்.
அந்த பச்சை உருண்டை மாட்டுச்சாணம் எனவும் அதனை ஜூஸ் போல் நீரில் கரைத்து அருந்துவதாகவும், அது ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பதாகவும் கூறி, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளது மாட்டுசானம் கிடையாது அது வடமாநிலங்கிளில் பிரபலமா பாங்கு நீர் ஆகும் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள காட்ச்சியில் ஆரம்பத்தில் மாட்டுசாணியை உறுட்டுவதுபோல் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருப்பதால் இதனை மாட்டுச் சாண ஜூஸ் என நினைத்து பரப்பி ஷேர் செய்கின்றார்கள்
வடமாநிலங்களில் சிவராத்திரி, ஹோலி போன்ற பண்டிகைகளின் போது இப்பானம் அனைவரும் அருந்துகின்றார்கள் மிகவும் பிரபலமாக விற்கப்படுகின்றன
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்:-
Tags: FACT CHECK மறுப்பு செய்தி