நிலவையும் பூமியையும் புகைப்படம் எடுத்த ஆதித்யா.! இஸ்ரோ வெளியிட்ட வீடியோ இதோ
நிலவையும் பூமியையும் புகைப்படம் எடுத்த ஆதித்யா.! இஸ்ரோ வெளியிட்ட வீடியோ இதோ
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, செப்டம்பர் 2 ம் தேதி காலை 11.50 மணிக்கு சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
மேலும் இந்த ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதுஆதித்யா-எல்1 இன்று முதல் சுமார் நான்கு மாதங்கள் பயணித்து பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே, 15 லட்சம் கி.மீ தொலைவில் இருக்கும் லக்ராஞ்சியன் புள்ளியில் நிலைகொள்ளும்.
பூமி என்றது ஒரு கிரகம் சூரியன் என்றது ஒரு நட்சத்திரம், இரண்டு சேரும் இடத்தில் ஒரு பொசிஷன் உள்ளது. அந்த இடத்தில், பேலன்ஸ் ஆக இருக்கும், அதில் மிக முக்கியமான ஒரு இடம்தான் லக்ராஞ்சியன்பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் சூரியன் இருக்கிறது. ஆனால் நாம் அனுப்பும் விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்டு 15 லட்சம் கி.மீ தூரத்திலேயே நின்றுவிடும்.அதாவது தற்போது நிலவு இருக்கும் தொலைவை விட 4 மடங்கு தூரத்தில் ஆதித்யாவை நாம் நிலை நிறுத்தப்படும்
ஆதித்யா எல்1 விண்கலத்தின் இரண்டு கட்ட புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் தன்னை தானே செல்பி எடுத்துள்ளது.
அந்த புகைப்படத்தில் சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT), விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) ஆகிய இரண்டு பேலோடுகள் தெரிகிறது.
மேலும் பூமி மற்றும் நிலவையும் புகைப்படம் எடுத்துள்ளது. இந்த இரண்டையும் சேர்த்து ஒரு காணொளியாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரோ வெளியிட்ட வீடியோ:-
Tags: இந்திய செய்திகள்