திருப்பத்தூர் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து 7 பேர் பலி Tirupathur accident
திருப்பத்தூர் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து 7 பேர் பலி Tirupathur accident
திருப்பத்தூர் அருகே சாலையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
வேன் பஞ்சரானதால், சாலையின் நடுவே அமர்ந்திருந்தபோது, பின்னால் வந்த லாரி வேன் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த சிலர் சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளி பகுதியில் வேன் பஞ்சர் ஆகியுள்ளது வேனுக்கு பஞ்சர் ஓட்டிய போது ஓய்வு எடுக்க வேனி இருந்தவர்கள் சாலை ஓரம் அமர்ந்து உள்ளனர். அப்போது வேகமாக பின்னால் வந்த லாரி வேன் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கொடூரமான விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகி உள்ளனர், மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்