2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது - கே.பி.முனுசாமி அறிவிப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் நவைமை, கடந்த ஒருவருட் காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.06.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா நிராவிட முன்னேற்றக் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும். 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் ஈழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழசு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'பட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் என்னாத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மாளிக்கப்படுகிறது. என அதிமுக தலைமை அறிவித்தது இந்நிலையில்
அதிமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர் சந்திப்பில்:-
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம் எனவும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் மேலும் தேர்தல் வந்தால் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின், மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுவது நடக்காது.
அதிமுக மீதான அச்சத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர உள்ளதாக சிலர் கூறுகிறார்கள். நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது, எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கேபி முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல் எனவும் விளக்கமளித்தார். மேலும், பாஜகவுடன் கூட்டணி இல்லை எனில் அதிமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு
மக்கள் நலனை முன்வைத்து நாடாளுமன்ற தேர்தலில் குரல் எழுப்புவோம் என கூறினார். மக்கள் தான் எங்கள் எஜமானர்கள், அதனால் மக்கள் நலனை முன்வைத்தே எங்கள் குரல் ஒலிக்கும் என தெரிவித்தார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்