Breaking News

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்பாக 'பாரத்' என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது

அட்மின் மீடியா
0

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசும் இடத்தில் இந்தியாவுக்கு பதிலாக 'பாரத்' என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது


இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் நமது நாட்டை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பலகையில், இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்பு அந்த நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள இருக்கையின் முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய மத்திய அரசு முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து துவக்க உரை நிகழ்த்திய பிரதமர்

ஜி20 நிகழ்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன், மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.” என்று கூறினார்.

இன்று ஜி 20 தலைவர் என்ற முறையில், உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறையை நம்பகத்தன்மை கொண்ட ஒன்றாக மாற்றுமாறு இந்தியா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. இந்த நேரத்தில், ‘அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்ற மந்திரம் நமக்கு ஜோதியாக இருக்கும்.

இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியானது, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அனைவரின் ஆதரவின் அடையாளமாக மாறியுள்ளது.இது இந்தியாவில் மக்களின் ஜி20 ஆக மாறியுள்ளது. 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback