வியாழக்கிழமை தோறும் சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்..முழு விவரம்
வியாழக்கிழமை தோறும் சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்..முழு விவரம்
மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு வாரம்தோறும் வியாழக்கிழமை அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு வாரந்தோறும் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதன்படி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து சாலையில் இருந்து சாய்பாபா கோயில் நோக்கொ வரும் வாகனங்கள் வழக்கம்போல் வெங்கடேச அக்ரஹாரம் சாலை வழியாக செல்லலாம்.போக்குவரத்து நெரிசல்சாரதாபுரம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் சாலை ஆகியவற்றில் இருந்து சாய்பாபா கோயில் நோக்கி வரும் வாகனங்கள் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் செல்ல அனுமதி இல்லை.
இந்த வாகனங்கள் வி.சி.கார்டன் 1வது தெரு வழியாக திருப்பிவிடப்பட்டு, செயின்ட் மேரீஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும். அலமேலுமங்காபுரம், டாக்டர் நஞ்சுடா சாலை ஆகிய சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலை செல்ல அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் ஒரு வழிபாதையாக சாரதாபுரம் சாலை நோக்கி செல்லலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்