Breaking News

உ.பி.யில் இஸ்லாமிய மாணவரை தாக்கச் சொன்ன ஆசிரியர்! வைரலாகும் வீடியோ நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள கப்பர்பூர் கிராமத்தில் உள்ள ஓர் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், வகுப்பறைக்குள் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் வரிசையாக வரவைத்து, இஸ்லாமிய மாணவர் ஒருவரை கன்னத்தில் அடிக்க சொல்ல சக மாணவர்களும் ஓவ்வொருவராக வந்து அந்த மானவரை அடித்துள்ளார்கள் , மேலும் ஆசிரியர் மாணவர்களிடம் “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி’ என கூறுகின்றார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது


உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள மன்சூர்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட குப்பாபூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் சக மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை அடிக்க சொல்கின்றார் 

அந்த வீடியோவில்  மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்கின்றனர். இஸ்லாமிய  மாணவர் மட்டும் ஆசிரியைக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். 'Jitne bhi Muslim bachche hai…' என்று ஆசிரியை கூறுகிறார். அந்த மாணவரை அடிக்குமாறு ஆசிரியர் கூறியவுடன் முதலில் ஒரு சிறுமி அந்த மாணவரை அடிக்கிறார். 

அதன்பின்னர் அடுத்தடுத்து பிற மாணவர்கள் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள்; வேகமாக அடியுங்கள் என்று ஆசிரியை சொல்வது வீடியோவில் கேட்கிறது. இஸ்லாமிய மாணவரை அடிக்குச் சொல்லும் ஆசிரியர் பெயர் திருப்தா தியாகி. என்றும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றது

வைரல் வீடியோ 

https://twitter.com/PoonamJoshi_/status/1695128859878760509

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

இச்சம்பவம் தொடர்பான விசாரணையின் ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என போலீசாரும், "மாணவர் தாக்கப்படும் வீடியோவை யாரும் பகிர வேண்டாம், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம்” என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் கூறியுள்ளது

வீடியோ வைரல் ஆன நிலையில் இதுகுறித்து மன்சூர்பூர் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், 

பள்ளியின் முதல்வரிடம் பேசியதாகவும், வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் காவலர் கூறினார். அதன்படி, ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரி சுபம் சுக்லா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  அவர்கள் 

அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனித இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது - இதைவிட மோசமான ஒரு ஆசிரியரால் நாட்டிற்கு எதுவும் செய்ய முடியாது.இதே மண்ணெண்ணையைத்தான் பாஜகவினர் பரப்பி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீக்கிரையாக்கியுள்ளனர். குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம் - அவர்களை வெறுக்காதீர்கள், நாம் அனைவரும் சேர்ந்து அன்பைக் கற்பிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் திரு.சத்யநாராயண் பிரஜாபத் அளித்த பேட்டி:-

https://twitter.com/muzafarnagarpol/status/1695102804551934221

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback