Breaking News

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்..முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்..முழு விவரம்


சென்னை ராயப்பேட்டை ஜீ.பி. சாலையின் இருபுறமும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இந்த சாலையில் இருபுறமும் 4 சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் கடை அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் அதிகப்படியான மக்கள் இந்த சாலைக்கு வருகை புரிகின்றனர். 

எனவே அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே அண்ணாசாலை - ஜீ.பி. சாலையில் 27-ந்தேதி முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் காட் சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திருப்பி விடப்பட்டு வைட்ஸ் ரோடு சாலை, ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம். 

மேற்கண்ட வாகனங்கள் ஜீ.பி. சாலை வழியாக அண்ணாசாலை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் ஜீ.பி. சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம்.ஜீ.பி. சாலை வழியாக அண்ணாசாலைக்கு அனுமதிக்கப்படும் 

இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் வலது பக்கம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாக செல்ல தடைசெய்யப்பட்டு, இடது பக்கம் திரும்பி அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் 'யு டர்ன்' செய்து அண்ணாசாலை, டேம்ஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்

அண்ணாசாலை-வாலாஜா சந்திப்பு: அண்ணாசாலை- வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் ஜீ.பி. சாலையில் அனுமதிக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்லலாம்.

அண்ணாசாலை-வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் வாகனங்கள் ஜீ.பி. சாலை சந்திப்பில் 'யு டர்ன்' செய்ய தடைசெய்யப்பட்டு, நேராக அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் 'யு டர்ன்' செய்து அண்ணாசாலை, டேம்ஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து ஜீ.பி. சாலை நோக்கி வரும் வாகனங்கள் டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை வழியாக சென்று ஜீ.பி. சாலையை அடையலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback