Breaking News

மகளிர் உரிமை தொகை குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - தமிழக காவல்துறை

அட்மின் மீடியா
0
மகளிர் உரிமை தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுகிறது எனவும், அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று மறைமுக உத்தரவு போட்டிருப்பதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும், இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில்

31.07.2023 - தேதியிட்ட தினமலர் செய்திதாளின் - பக்க எண் 8-ல்குறிப்பிட்டுள்ள "டீ கடை பெஞ்ச்” பகுதியில், மகளிர் உரிமை தொகை வழங்க “மாஸ்டர் பிளான்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு மாறானது. 

மகளிர் உரிமை தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுகிறது எனவும், அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று மறைமுக உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. 

தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ இது போன்ற எந்த ஒரு உத்தரவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு இலக்கு வைத்து எவ்வித அபராதமும் தமிழக காவல்துறை வசூல் செய்வது இல்லை. 

இதுபோல், பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback