Breaking News

ஒரு சார்ஜ்ஜில் 300 கிலோமீட்டர் மைலேஜ் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கோமகி நிறுவனம் அறிமுகம் முழு விவரம் komaki electric scooter

அட்மின் மீடியா
0

கோமகி நிறுவனம் தனது வெனீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. 



கோமகி  வெனீஸ் அல்ட்ரா ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருத்தவரை பட்சமாக 300 கிலோ மீட்டர் மைலேஜ் தரும். 

இது அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது 

இந்த வாகனம் ரூபாய் 1,67,500 என்ற எக்ஸ் ஷோரும் விலையில் விற்பனையாகி வருகிறது. 

சிறப்பம்சங்கள்:- 

கழட்டி மாற்றக்கூடிய டைப்பிலான  தீ விபத்து ஏற்படாத வகையிலான ஸ்மார்ட் பேட்டரிகள் 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஏற்றி கொள்கிறது.

டிஎஃப்டி ஸ்கிரீன் 

முழு எல்இடி சிஸ்டம் 

3000 வாட்ஸ் மோட்டார் மற்றும் 50 ஆம்ஸ் கண்ட்ரோலர், 

ரிவர்ஸ் மோட் மற்றும் மூன்று கியர் மோடு ரீஜென் சிஸ்டம் எக்கோ, ஸ்போர்ட் மற்றும் டர்போ ஆகிய 3 மோடுகள் உள்ளன.

அன்போடு நேவிகேஷன், 

இரண்டு பக்கமும் ஃபுட் ரெஸ்டுகள், 

சிபிஎஸ் டபுள் டிஸ்க் கீ லெஸ் என்ட்ரி சவுண்ட் சிஸ்டம், 

ரைடு செய்யும் போதே கால் செய்யும் வசதி 

வெனீஸ் ஸ்போர்ட் கிளாசிக் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 1,03,900 இது முழு சார்ஜில் 75- 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும். வெனீஸ் ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் ரூ1,49,757 என்ற விலையில் விற்பனை ஆகிறது. 

இது முழு சார்ஜில் 200 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback