சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி இஸ்ரோ சாதனை வீடியோ இணைப்பு chandrayaan successfully landed
சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரைஇறங்கியது என இஸ்ரோ அறிவிப்பு!!
நிலவின் தென் துருவம் அருகே சென்ற முதல் நாடு இந்தியா என வரலாற்று சாதனை செய்துள்ளது இந்தியா
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்கலத்தை கடந்த ஜூலை, 14ம் தேதி இஸ்ரோ அனுப்பி வைத்தது.பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. பூமியில் இருந்து 179 கிமீ தொலைவில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
அதன்பின்பு இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான சுற்றுப் பாதை தொலைவு படிப்படியாக குறைந்து வந்தது.இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்து கலத்தில் இருந்து, 'லேண்டர்' நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதுஇந்நிலையில் நேற்று முதல் உயரம் குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டர் ஆக.23-ல் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது
அதன் படி இன்று நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கியது விக்ரம் லேண்டர்
அதன் பின்னர் நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது
லேண்டரில் இருந்து ரோவர் கருவி வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
திட்டமிட்டபடி ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவில் தரையிறங்கி உள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த பயணமும் திட்டமிட்ட நேரத்தின் படி, கன கச்சிதமாக நடந்து வெற்றி பெற்றிருப்பது பெருமிதமாக உள்ளது. நிலவின் தென் துருவத்தின் அருகில் லேண்டரைக் கொண்டு சென்று நிலவைத் தொட்ட முதல் நாடு, நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தியா.எஸ். சோமநாத் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், தளராத உறுதியும் எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியது. இந்த வெற்றிக்கு வழிவகுத்த அனைத்து விஞ்ஞானிகளும் மிக்க நன்றி” என இயக்குனர் பி வீரமுத்துவேல் பேசியுள்ளார்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/kohlidrift/status/1694341175497605592
சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய வீடியோவை நேரலையில் பார்க்க
Tags: இந்திய செய்திகள்