ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு gram sabha
சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-
பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி, 15.08.2023 சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பார்வை 2-ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 15.08.2023 சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணி அளவில் நடத்திட வேண்டும்.
கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
கிராம சபை கூட்டம் நிகழ்ச்சிகளை பதிவு செய்திடும் பொருட்டு பார்வை4-ல் காணும் இவ்வியக்கை கடிதத்தின் வாயிலாக, தெரிவித்தவாறு ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட GS-NIRNAY கைபேசி செயலியை பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், 15.08.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு 18.08.2023- க்குள் அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணைப்பு: கிராம சபைக் கூட்டப் பொருள்கள்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்டு 15 ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெறும்
Tags: தமிழக செய்திகள்