Breaking News

கலைஞர் மகளிர் உரிமைதொகை ரூபாய் 1000 விண்ணப்பம் வாங்கவில்லையா? உங்களுக்கு அடுத்த வாய்ப்பு

அட்மின் மீடியா
0

 கலைஞர் மகளிர் உரிமை திட்டமுகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகைபுரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

 

விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண் மற்றும் பயனாளிகள் முகாம்களுக்கு வரவேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவை குறித்து நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி நியாய விலை கடை பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.

நியாய விலை கடை பணியாளர் இந்த விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட வீடுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

ஒரு வருவாய் வட்டத்திற்கு பொது விநியோக நியாயவிலை கடை அடிப்படையில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்படும்.

இத்திட்டத்திற்கு பொது விநியோக நியாயவிலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடைக்கு ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பொது விநியோக நியாயவிலை கடை பணியாளரும் தங்களது பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு தெரு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பத்தை வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.

விண்ணப்பத்தில் அந்த குடும்பத்தின் குடும்ப அட்டை எண்ணை குறித்து வழங்க வேண்டும். விண்ணப்பங்களில் பயனாளிகள் வரவேண்டிய தேதி மற்றும் நேரம் குறித்து கொடுக்க வேண்டும்.

விண்ணப்ப பதிவு முகாம் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடத்தப்படும்.

ஒரு குடும்பத்துக்கு வழங்கிய விண்ணப்பத்தை வேறு குடும்பத்தினர் பயன்படுத்த கூடாது.

ஒவ்வொரு நியாய விலை கடையிலும் எந்தெந்த நாட்களில், எந்தெந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என்ற விவரத்தை தகவல் பலகையில் வைக்க வேண்டும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback