எந்தப் பொருளை வாங்கினாலும் பில் வாங்கி ஆப்பில் அப்லோடு செய்யுங்க 1 கோடி பரிசு வெல்லுங்க மத்திய அரசின் புதிய திட்டம் Mera Bill Mera Adhikaar
அட்மின் மீடியா
0
இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் பில்களை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது
மேரா பில் மேரா அதிகார் என்ற இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு காலாண்டிலும் ரூபாய் ஒரு கோடிக்கான இரண்டு பம்பர் பரிசுகள் வழங்கப்படும் இந்த திட்டம் இத்திட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் முதல் கட்டமாக அசாம் மாநிலம்,குஜராத் மாநிலம், ஹரியானா மாநிலம், மற்றும் யூனியன் பிரதேசங்களான பாண்டிச்சேரி மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய மாநிலங்களில் அடுத்த 12 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வெற்றியாளருக்கு ரூ.1 கோடி ரூபாயும் அடுத்த மூன்று வெற்றியாளர்களுக்கு ரூ.10 லட்சமும் அதன் பின்னர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 50 வெற்றியாளர்களுக்கு ரூபாய் ரூ.10,000 ரொக்க தொகை வழங்கப்படும்.
மேலும் ஒவ்வொரு மாதமும், 800 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஜிஎஸ்டி பில்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தலா ரூ.10,000 மதிப்புள்ள பரிசு வழங்கப்பட உள்ளது,
இத்திட்டத்தில் உங்கள் பில்கள் குறைந்தபட்ச மதிப்பு ரூபாய் 200 ஆகும்.
ஒரு மாதத்தில் 25 இன்வாய்ஸ் பில்கள் வரை ஒருவர் பதிவேற்றிக் கொள்ள முடியும்.
இதற்காக ‘web.merabill.gst.gov.in‘ என்ற இணையதள போட்டல் மற்றும் ப்ளே ஸ்டோரில் ஆப்களையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது உங்கள் பில்களை அதில் நீங்கள் பதிவேற்றிக் கொள்ள முடியும்.
- என் ரசீது - என் அதிகாரம் என்ற இந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொள்கிறது.
- நுகர்வோர் தங்களது ரசீதுகளை மத்திய நிதியமைச்சகத்தின் mera bill mera adhikaar என்ற இணையதளத்தில் பதிவிடலாம்.
- merabill.gst.gov.in என்ற இணையதளத்திலிருந்து மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த செயலியில் நுகர்வோர் பதிவிடும் ரசீதுகள், காலாண்டு அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, குலுக்கல் முறையில் இரண்டு பம்பர் பரிசுகள் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- • 800 அதிர்ஷ்ட நுகர்வோர் இந்த செயலி மூலம் தெரிவு செய்யப்பட்டு, தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாதமும் 10 குலுக்கள் நடத்தப்பட்டு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூற்ப்பட்டுள்ளது
- 200 ரூபாய்க்கு மேற்பட்ட ரசீதுகளை இந்த மொபைல் செயலியில் பதிவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தற்போதைக்கு தமிழகத்தில் இல்லை , ஆனால் கூடிய விரைவில் வரும் என கூறப்பட்டுகின்றது
ஆப் இன்ஸ்டால் செய்ய:-
இணையதள முகவரி:-
Tags: இந்திய செய்திகள்