மணிப்பூரில் நிர்வாணமாக பெண் ஒருவர் போலிசாரை அடிப்பதாக பரவும் பொய்யான வீடியோ உண்மை என்ன sonu kinnar
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மணிப்பூரில் நடைபெறும் காட்சிகள் தான் இது ஆனால் செய்திகளோ வெளியே என்னென்னவோ வருகின்றன உண்மை நிலையை மக்களுக்கு ஆதாரங்களோடு வெளியிட வேண்டும் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
மணிப்பூர்:-
மணிப்பூர் வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் தலை நகரம் இம்பால் ஆகும். மணிப்பூர் வடக்கில் நாகலாந்து ,தெற்க்கில் மிஸோரம், மேற்க்கில் அஸ்ஸாம் கிழக்கில் மியன்மாருக்கு நடுவில் உள்ளது மணிப்பூரை பொறுத்தவரையில் அங்கு எண்ணிக்கையின் அளவில் மிக பெரிய சமூகமாக இருப்பது மைத்தி சமூகம் இவர்கள் மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய மணிப்பூர் 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன்பின்பு 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலத் தகுதி கிடைத்தது. ம்ணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் உள்ளது,தற்போது பாஜக ஆட்சி நடைபெற்றுவருகின்றது
பிரச்சனை:-
மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மைத்தி சமூகத்தினரை சேர்க்க இணைக்கவேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை அதே சமயம் மைத்தி சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் எதிர்த்து வருகின்றார்கள் இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மைத்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மைத்தி சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது.
பேரணி:-
இந்நிலையில் எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மைத்தி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) சார்பில் ம்ாநிலத்தில் 10 இடங்களில் ‘ஒற்றுமை அணிவகுப்பு நடத்தப்பட்டது அந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பழங்குடியினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வன்முறை:-
அப்போது பழங்குடிகளுக்கும் - மேதி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடிக்க மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது.கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள் தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நகரமே தீப்பிடித்து எரிந்தது.
வைரல் வீடியோ:-
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு கருதி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகியது. கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் தற்போது தான் வெளி உலகிற்க்கு தெரிய வந்துள்ளது இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
இணையத்தில் பரவும் பொய்யான வீடியோ:-
இந்நிலையில் மணிப்பூரில் பெண் ஒருவர் தன் ஆடைகளைக் கழட்டிவிட்டு நிர்வாணமாகக் காவலர்களைத் தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ மணிப்பூரில் நடந்தது இல்லை என்றும் 15.05.2023 அண்ரு உத்திரபிரதேசத்தில் நடந்தது என்று அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சண்டௌலி மாவட்டத்தின் முகல்சராய் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் சோனு கின்னார் என்ற திருநங்கை 834 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், பாஜக வேட்பாளர் மாலதி தேவி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். உடனடியாக சோனுகின்னார் ஆதரவாளர்கள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர், மேலும் ஆதரவாளர்களை பாதுகாப்பு போலீசார் உள்ளே விடாமல் தடுத்தார்கள் அதில் போலீசாருக்கும் திருநங்கைகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்ப்பட்டது அப்போது திருநங்கைகள் தங்கள் உடைகளை கழற்றி போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தார்கள் என UP Tak செய்தி வெளியிட்டுள்ளது
முடிவு:-
உத்திரபிரேசத்தில் நடந்த ஓர் வீடியோவை மணிப்பூரில் நடந்தது என பொய்யாக பரப்பிவருகின்றார்கள் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://twitter.com/YesWeExistIndia/status/1658175343860101120
Tags: FACT CHECK மறுப்பு செய்தி