Breaking News

அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் postal life insurance recruitment 2023

அட்மின் மீடியா
0

திருப்பூர் தாராபுரத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

 

 

திருப்பூர் அஞ்சல் கோட்ட நிர்வாகத்தின் கீழ் வரும் தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் ஜூலை 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நேர்க்காணலில் கலந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:-

குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:- 

18 வயதில் இருந்து 50 வயது வரை

ூடுதல் தகுதிகள்;-

சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், 

ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், 

அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், 

சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், 

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள்,

கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

நேர்காணல்:-

மேற்கண்ட தகுதியுடையவர்கள் 

மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), 

அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, 

முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அனுகவும். 

நேர்க்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்க்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. 

முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

postal life insurance recruitment 2023

Post Office Recruitment 2023

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback