ரயிலைத் தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரப்பப்படும் வீடியோ உண்மை என்ன Passengers Pushing train
வட மாநிலப் பகுதியில் பெயர் தெரியாத பழுதாகி நின்ற ரயிலை ராணுவ வீரர்களும், மக்களும், ரயில்வே ஊழியர்களும் தண்டவாளத்தில் இறங்கி தள்ளும் காணொலி ஒன்று இணையத்தில் வைரலானது
அந்த வீடியோவில் ரயில் நடுவழியில் பழுதாகி நின்றுள்ளது அந்த ரயிலில் பயணித்த ராணுவ வீரர்களும், மற்ரவர்களும் இறங்கி அந்த ரயிலை தள்ளுகின்றார்கள்
ஆனால் அந்த வீடியோவில் பழுதாகி நின்ற ரயிலின் பெயர் குறித்தும், எங்கு எடுக்கப்பட்ட வீடியோ என தெரியாமல் பலரும் ஷேர் செய்து வந்த நிலையில்
தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் ட்விட்டரில்
clarification:
This relates to Tr No 12703 (HWH-SC) fire incident on 07.07.23The video is about conscious decision by Rly Personnel & Local Police to detach the rear coaches to avoid further spread of fire.It was an emergency action taken without waiting for help from engine
கடந்த 7-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து செகந்தராபாத்துக்கு சென்று கொண்டிருந்த விரைவு ரயில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், எஸ் 2 முதல் எஸ் 6 வரையிலான பெட்டிகளுக்கு தீ பரவிய நிலையில், எஸ் 1, எஸ் 2 மற்றும் பொதுப்பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்காக அந்த பெட்டிகள் கழற்றிவிடப்பட்டன.
அந்தப் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காக எஞ்ஜின் வருவதற்கு காத்திருக்கும் நேரத்தில் தீ பரவக்கூடாது என அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், ரயில்வே போலீசாருடன் இணைந்து மக்கள் ஒன்றுகூடி ரயிலை தள்ளினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: FACT CHECK மறுப்பு செய்தி