Breaking News

இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பல் - நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கொடூரம் Manipur Violence

அட்மின் மீடியா
0

மணிப்பூரில் குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல், நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். அதற்கு சூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் கலவரங்கள் நடந்து வருகின்றது

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு கருதி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது. 

கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் தற்போது தான் வெளி உலகிற்க்கு தெரிய வந்துள்ளது

இச்சம்பவம் காங்போக்பி மாவட்டத்தில் மே 4 அன்று நடந்தது என கூறப்படுகின்றது தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback