Breaking News

ஹிமாச்சலை புரட்டி போடும் கனமழை வெள்ளக்காடக காட்சி அளிக்கும் ஹிமாச்சல் வைரல் வீடியோக்கள் himachal pradesh heavy rain

அட்மின் மீடியா
0

ஹிமாச்சலை புரட்டி போடும் கனமழை வைரல் வீடியோ

இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது கடும் கன மழை பெய்து வருகின்றது, அதில் ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பாறை சரிவு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஒருசில இடங்களில் பாலங்களை மூழ்கடித்த படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஹிமாச்சல் கேரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக மண்புராவையும், நலங்காரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 105ல் சித்தார்த்தா தொழிற்சாலை அருகே மரங்கள் விழுந்துள்ளதால் சாலைகள் அடைக்கப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இமாச்சல் பிரதேசத்தின் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், லாஹுவால் பகுதியில் உள்ள கிராம்பு கிராமம் மற்றும் சோட்டா தர்ரா மற்றும் ஸ்பிதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பெய்த கனமழையால், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. 

அதேபோல் ஹிமாச்சல் தலைநகர் சிம்லாவில், கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து கொட்டி, சன்வாரா இடையேயான ரயில்வே டிரக் மூடப்பட்டது.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மண்டி மற்றும் குலு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதன் எதிரொலியாக, பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

கனமழை அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பல இடங்களில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ரயில் தண்டவாளங்களில் மரங்கள் விழுந்ததால் கல்கா - ஷிம்லா இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் லாஹீல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரல் வீடியோ:-

https://twitter.com/Earth42morrow/status/1676667670362722304

https://twitter.com/niteshr813/status/1677953310429708289

https://twitter.com/shubhamtorres09/status/1678022347645947904

https://twitter.com/shubhamtorres09/status/1678011143997247488

https://twitter.com/IamGrumpyyy/status/1677941070221410304

https://twitter.com/pahadanldki_SK/status/1678028641429757954

https://twitter.com/pahadiromeo/status/1677967402024284161

https://twitter.com/DobhalAnkush/status/1677630422174539776

https://twitter.com/thind_akashdeep/status/1677879400187199489

https://twitter.com/thind_akashdeep/status/1677959273962434561

https://twitter.com/Jhaanji035/status/1678012783932354560

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback