கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் என்ன? டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் முகாம் அலுவலகத்தில் தனது காவலாளி துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து, டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், இன்று காலை 6.45 மணிக்கு நடைப்பயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்துக்கு வந்துள்ளார் விஜயகுமார். பாதுகாவலரிடம் துப்பாக்கியை வாங்கிய அவர் காலை 6.50 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விஜய குமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க மாத்திரைகளையும் விஜயகுமார் சாப்பிட்டு வந்துள்ளார். டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் அல்ல என்றும் உடற்கூறாய்வு முடிந்து இன்று மாலை விஜகுமாரின் உடல் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்