Breaking News

வாக்கிங் சென்ற பெண்கள் மீது கார் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

தெலுங்கானா மாநிலத்தில் சாலையோரம் நடை பயிற்சி செய்தவர்கள் மீது அதிக வேகமாக வந்த கார் மோதியதில் இரண்டு பெண்கள் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஐதர்ஷாக்கோட் பிரதான சாலையின் ஓரத்தில் 3 பேரும் வாக்கிங் சென்றபோது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். 

இதுதொடர்பாக நர்சனிகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில் விபத்து ஏற்படுத்தியவர் ரங்கார ரெட்டி மாவட்டம் பண்டலகுடா ஜாகிர் பகுதியை சேர்ந்த பத்ருதீன், நேற்று தனது 19-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர்கள் 3 பேருடன் கேக் வாங்குவதற்காக காரில் சென்றுள்ளார் உறசாக மிகுதியில் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஐதர்ஷாக்கோட் சந்திப்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபயணம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. 

நெஞ்சை பதைபதைக் வைக்கும் விபத்தின் சிசிடிசி காட்சி வெளியான நிலையில், தப்பியோடிய இளைஞரை நேற்று மாலை காவல்துறையினர் செய்தனர். 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/ntdailyonline/status/1676142715216756738

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback