Breaking News

பிரான்சில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை | தொடரும் கலவரம் 600 பேர் கைது | நடந்தது என்ன

அட்மின் மீடியா
0

பிரான்சில் சிறுவனை துப்பாக்கியால் சுட்ட போலிஸ் |  தொடரும் கலவரம் 600 பேர் கைது | நடந்தது என்ன


சிறுவன் உயிரிழப்பு நடந்தது என்ன:-

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள நாந்த்ரே பகுதியில் உள்ள சிக்னலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது.

இதையடுத்து போலீசார் அந்த காரை துரத்தி பிடித்து சுற்றி வளைத்து டிரைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த காரை ஓட்டி சென்ற ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த நஹேல் என்ற 17 வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து காருக்குள்ளேயே இறந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

கலவரம்:-

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து பாரிஸின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான போலீஸார் காயமடைந்துள்ளனர்.  தற்போது பிரான்ஸில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் காவல் துறையினருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தெற்கே டல்லவுஸ் முதல் வடக்கே லில்லி வரையிலான பல நகரங்களில் ஏராளமான வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. 

வன்முறைகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக நகர் முழுவதும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் முக்கிய நகரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வன்முறையை தடுக்க பாரீஸ் புறநகர் பகுதியான கிளமார்ட் பகுதியில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே:-

போராட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதே முன்னுரிமை. சட்டம் - ஒழுங்கை மீட்டெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் கலவரம் குறித்து ஐ.நா. சபை:-

பிரான்ஸ் தனது காவல் துறையில் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞன் பிரான்ஸில் காவல் துறையினரால் கொல்லப்பட்டது எங்களை கவலையடையச் செய்துள்ளது. பிரான்ஸ் இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது

இந்த நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback