இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நேரில் ஆஜராக பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான பொன்முடியின் சென்னை மற்றும் விழுப்புரம் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
2006 முதல் 2011ஆம் ஆண்டு கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, 5 செம்மண் குவாரிகளை சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் , அரசுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2012 ம் ஆண்டு அதிமுக காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை 7 மணி முதல் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
சுமார் 13 மணிநேரம் நடத்திய சோதனை இரவு 8 மணிக்கு முடிந்தது சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இருந்து அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் திமுக எம்பி கௌதம சிகாமணி ஆகியோரிடம் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த விசாரணை முடிவுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து இன்று மலை 4 மணி அளவில் மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்