பெற்ற மகளை 4வதாக திருமணம் செய்த இஸ்லாமிய தந்தை என பரப்பப்படும் வதந்தி செய்தி !! உண்மை என்ன? a father married his daughter 4th marriage
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பாகிஸ்தானில் பெற்ற மகளை 4 -வதாக திருமணம் செய்த இஸ்லாமிய தந்தை என்று ஒரு வீடியோவை ஷேர் செய்து வருகின்றார்கள். அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பாகிஸ்தானில் 2021 ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் மகளை தந்தை திருமணம் செய்யவில்லை என்றும் அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் வீடியோ பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அமீர் கான் என்பவர் ரபியா என்பவரை திருமணம் செய்துள்ளார் அவர்கள் தற்போது அமெரிக்காவில் உள்ளார்கள், 2021 ம் ஆண்டு அவரது நண்பர் எடுத்த அந்த வீடியோ அப்போது வைரலானதை தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்த டெய்லி பாகிஸ்தான் என்ற இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தார்கள்
அதில் நான் எனது மாணவியைத்தான் 4வது மனைவியாகத் திருமணம் செய்துள்ளேன். ஆனால் நான் முஃப்தி இல்லை என்று அமீர் கான் கூறியுள்ளார் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
மேலும் அதில் ராபியா எனது நான்காவது மனைவி என்பது உண்மைதான், ஆனால் இந்த நேரத்தில் எனக்கு நான்கு மனைவிகள் இல்லை. தற்போது எனக்கு ஒரே ஒரு மனைவி தான் ரபியா. எனது முதல் மூன்று மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டேன். எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி தர்போது குழந்தைகள் உள்ளனர்.
மேலும் நான் குர்ஆன் ஆசிரியரோ அல்லது எந்த இஸ்லாமிய பாட ஆசிரியரோ அல்ல என்றும் நான் லாகூரில் உள்ள அவரது தந்தையின் பள்ளியில் கற்பிக்கும் போது ராபியாவிற்க்கு கணினி பயிற்சி அளித்தேன் . அதனால் தான் அவர் என்னை ஆசிரியர் என்று அந்த வீடியோவில் அழைத்தார் என விளக்கம் அளித்துள்ளார்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி