மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய 1 மாதம் சிறப்பு முகாம் - மின்சார வாரியம் அறிவிப்பு
மின் இணைப்புகளில் பெயர் மாற்ற ஒரு மாதம் சிறப்பு முகாம் - மின்சார வாரியம் அறிவிப்பு
வீடு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் ஒரு மாதம் வரை சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடத்தப்படும் என தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின் வாரியம் விடுத்த செய்திக் குறிப்பில்:
வீட்டு இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர்மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது.
பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க சிறப்பு முகாம், வரும் 24ம் தேதி முதல் ஒரு மாதம் வரை, அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை தினம் தவிர்த்து, அனைத்து வேலை நாட்களிலும் காலை 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படும். முகாமில், 726 ரூபாய் கட்டணம் செலுத்தி, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யலாம்
தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்தில் நேரிலோ, இணையத்திலோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்