Breaking News

இப்படி செய்தால் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.15-க்கு கிடைக்கும்! அமைச்சர் நிதின் கட்கரி petrol will be sold at rs 15 per litre in india Nitin Gadkari

அட்மின் மீடியா
0

தற்போது 102 ரூபாய்க்கு விற்க்கப்படும் பெட்ரோல் இப்படி செய்தால் ரூபாய் 15 க்கு கிடைக்கும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி  கூறி அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளார்



மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி  ராஜஸ்தானில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்பொழுது பெட்ரோல் ரூ.15 விற்கப்படும் என பேசியிருக்கிறார்.

விவசாயிகள் உணவு உற்பத்தியாளர்களாக மட்டுமல்லாமல், ஆற்றல் உற்பத்தியாளர்களாகவும் வருவார்கள் என்ற எண்ணத்தில்தான் இந்த அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது. 

விவசாயிகளே எரிசக்திகளைத் தயாரிக்க முடியும். அதை அவர்களே விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கவும் முடியும்.தற்போது வாகனங்கள் எல்லாம் எத்தனாலில் இயங்கத் துவங்கி விட்டன. நாட்டில் உள்ள வாகனங்கள் 60% எத்தனால் 40 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறினாள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 15க்கு குறைந்து விடும். இதனால் காற்று மாசு ஏற்படுவதும் குறையும்.

கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதும் குறையும்.தற்போது இந்தியா சுமார் ரூ 16 லட்சம் கோடி அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியாவில் இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலை மாறிவிட்டால் இந்த ரூ 16 லட்சம் கோடி இந்தியாவில் உள்ள விவசாயிகள் கைக்குக் கிடைக்கும். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் உயரும்"எனப் பேசினார்.

அதாவது நாட்டில் 60 சதவிகித வாகனங்கள் எத்தனாலினாலும், 40 சதவிகித வாகனங்கள் மின்சாரத்தாலும் இயங்கினால், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.15-க்கு கிடைக்கும். இதனால் மக்களும் பயனடைவார்கள்" என்று கூறினார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback