Breaking News

இனி டிவிட்டரில் ஒரு நாளுக்கு 1000 மெசஜ் மட்டுமே பார்க்க முடியும் எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் உலகளவில் அதிகம் பயனர்களை கொண்டுள்ள ஒரு தளமாகும்.இந்த நிலையில் உலகம் முழுவதும் நேற்று மாலை ட்விட்டர் தளம் திடீரென முடங்கியது. உடனடியாக சரிசெய்யப்பட்டது 



உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதன் ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நீக்கினார். 

அதன் பின்பு ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. மேலும் ப்ளூ டிக் பெற ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. 

அதேபோல் ப்ளூ டிக் பயனர்களுக்கு 

டிவிட் எழுத்துக்கள் அதிகரிப்பு 

டிவிட் செய்ததை எடிட் செய்யும் வசதி 

வாட்ஸப் போல் ஆடியோ, 

வீடியோ கால் பேசும் வசதி 

விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கலாம் 

என பல மாற்றங்கள் கொண்டு வந்த அவர் தற்போது

ட்விட்டர் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே ட்விட்டரை முழுவதுமாக பயன்படுத்த முடியும். அதற்கேற்ப புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் எலான் மஸ்க்.

ப்ளூ டிக் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 10000 பதிவுகளைப் படிக்க முடியும். 

பிற பயனர்கள் 1000 பதிவுகளையும், 

புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க். 

தேவையற்ற தரவுகளை ஒழிப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback