வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் போல வீடியோ மெசேஜ் அனுப்பலாம் புதிய அப்டேட் முழு விவரம் whatsapp video message
வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் போல வீடியோ மெசேஜ் அனுப்பலாம் புதிய அப்டேட் விரைவில்
வாட்ஸ் அப்:-
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் பயனாளர்களை கவரும் விதமாக அடுத்தடுத்து பல்வேறு புதிய அப்டேட்கள் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த அப்டேட்கள் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்
அந்த வகையில், வாட்ஸ் அப்பின் சமீபத்திய பீட்டா பதிப்பில், வீடியோ மெசேஜிங் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய அப்டேட்:-
வாட்ஸப்பில் புதியதாக எடிட் பட்டன், தனிநபர் சாட் லாக், மல்டிடிவைஸ் சப்போர்ட் உள்ளிட்ட பல அப்டேட்டை தொடர்ந்து தற்போது வாட்ஸ்அப் வழியாக 1 நிமிட வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது
தற்போது வாட்ஸப்பில் நாம் ஒரு மெசேஜ்ன் ஐ டைப் செய்து அனுப்பலாம் அல்லது ஆடியோ மெசேஜ்களை அனுப்பலாம்
இனி ஆடியோ மெசஜ் போல் வீடியோ மெசேஜ் ஷேர் செய்யும் வசதியை கொடுக்க வாட்ஸ்அப் பீட்டா வெர்சன்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த அம்சம் தற்போது வாட்ஸ் அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா டெஸ்டர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
வீடியோ மெசஜ் பயன்படுத்துவது எப்படி:-
வாட்ஸ் அப்பில் வீடியோ செய்தியை அனுப்ப வாட்ஸப் சேட் செல்ல வேண்டும்.
அடுத்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பும் பாக்ஸின் வலதுபுறத்தில் உள்ள கேமரா பட்டனை அழுத்தவும்
அடுத்து அதில் கேமரா பட்டனை வீடியோ பட்டனாக மாற்ற ஆப்ஷன் கேட்கும்.
அதனை பயன்படுத்தி குறுகிய வீடியோ செய்திகளை அனுப்பத் தொடங்கலாம்.
இப்போது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் வீடியோ செய்திகளை அனுப்ப முடியும். அதாவது வாட்ஸ்அப் மூலம் வீடியோவை உருவாக்கி அதை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம்
Tags: தொழில்நுட்பம்