Breaking News

திருப்பரங்குன்றம் தர்காவில் தொழுகை நடத்த தடை இல்லை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு முழு விவரம் Thiruparankundram sikkandar dargah

அட்மின் மீடியா
0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் சிக்கந்தர் தர்காவில்  இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை உச்சியில் அமைத்துள்ள ஹசரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா மிகவும் பழைமை வாய்ந்தது. 

மலையின் அடிவாரத்தில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலும், மலையின் ஒரு பக்கத்தில் காசிவிஸ்வநாதர் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகியன உள்ளது. 

அதே சமயம் 1920 ஆண்டில் தற்போது தர்கா அமைந்துள்ள இடம்  தேவஸ்தனம் போர்டுக்கு சொந்தமானது என்று மதுரை சார்பு நீதிமன்றத்தில் O.S.No.4 of 1920 தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கில் நெல்லித்தோப்பு, தர்கா மலைஉச்சிக்கு செல்லும் படிக்கட்டுக்கள், கொடிமரம் உள்ளடங்கியயதர்காவிற்கு சொந்தமான இடங்கள் என்று இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று தீர்ர்பு வழங்கப்பட்டது. 

மீண்டும் 1975 ம் ஆண்டு மீண்டும் தேவஸ்தானம் போர்டு சார்பில் மீண்டும் மதுரை சார்பு நீதிமன்றத்தில் OS No. 506 of 1975 மலை உச்சியில் உள்ள கொடிமரம் அருகே உள்ள இடத்திற்கு உரிமை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மேற்படி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, மேற்படி வழக்கின் மூலம் தர்காவின் நில உரிமை மீண்டும் உறுதி செய்யப்பட்டது

இந்த பழமையான தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதமான ரஜப் மாதம் 16 நாளில் சந்தனகூடு உரூஸ் மற்றும் கந்தூரி விழா நடைபெறுவது நடைபெறுவது வழக்கம். மேலும் தர்காவில் ஆண்டுதோறும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 

அதில் திருப்பரங்குன்றம் நெல்லிதோப்பு மலை பகுதியில்  சிக்கந்தர் தர்காவும் உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலும் உள்ளது. தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதால் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் பக்த்ர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்டவற்றை செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் அதில் கோரியிருந்தார்.

இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரை மணிநேரம் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதால் ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை என குறிப்பிட்டு, தொழுகைக்கு தடை விதிக்க முடியாது என கூறி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback