டியூபர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை முழு விவரம்
கேரளாவில் பிரபல யுடியூபர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தற்போது மொபைல் இருந்தால் போது அவர்கள் தனியாக யூடியூப் ஆரம்பித்து அதில் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.யூடியுப்பில் வீடியோ பதிவிட்டு, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் யுடியூபர்கள் இந்த வருமானத்தை சரிவர கணக்கில் குறிப்பிடாமல் அத்ற்க்கு வரி செலுத்தாமல் உள்ளார்கள் என கூறி வந்த புகாரை அடுத்து கேரளாவில் பிரபல யுடியூபர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
நடிகை பேர்லே மானே மற்றும் யூ டியூபர்கள் சுஜித் பக்தன், ஜெயராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் வீடுகளிலும் எர்ணாகுளம், பத்தனம்திட்டா, திருச்சூர், ஆலப்புழா, கோட்டயம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது
ஆண்டுக்கு ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை வருமானம் வருவதாகவும் அதில் நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் ஆனால் அதற்கான வருமான வரி செலுத்தவில்லை என்றும் வரி கட்டாமல் ஏய்ப்பு செய்வதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags: இந்திய செய்திகள்